Osanna paalar paadum | ஓசன்னா பாலர் பாடும்

ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே
Osanna paalar paadum raajaavaam meetparkkaE
மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே
mahimai puhazh keerththi ellaam uNdaahavaE

கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர்
karththaavin naamaththaalaE varung kOmaanaE neer
தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர். -ஓசன்னா
thaaveethin raajaa mainthan thuthikkappaduveer

உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;
unnatha thoothar sEnai viNNil puhazhuvaar
மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். -ஓசன்னா
maanthar padaippu yaavum isainthu pOtruvaar

உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார் போலும்,
ummunaE kuruththOlai koNdEhinaar pOlum
மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம் -ஓசன்னா
mantraattu keetham sthOththiram koNdummai sEvippOm

நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;
neer paadupadumunnaE paadinaar yutharum
உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும். -ஓசன்னா
uyarththappatta ummai thuthippOm naangaLum

அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;
appaattaik kEtta vaNNam em vENdal kELumaE
நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே. -ஓசன்னா
neer nanmaiyaal niraintha kaaruNya vEntharaE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)