கர்த்தரை நம்பிடுங்கள்
karththarai nambidungaL
அவர் கைவிடவே மாட்டார் -2
avar kaividavaE maattaar
உயிர் வாழ எதை உண்போம்
uyir vaazha ethai uNbOm
உடல் மூட எதை உடுப்போம் (2)
udal mooda ethai uduppOm
என்றே கவலைப்படல் வேண்டாம்
entraE kavalaipadal vENdaam
உணவை விட உயிரும் உடையை விட உடலும்
uNavai vida uyirum udaiyai vida udalum
உயர்ந்தவை அல்லவா -2
uyarnthavai allavaa
வானத்துப் பறவையைப் பாருங்கள்
vaanaththu paravaiyai paarungaL
அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
avai vithaippathumillai aruppathumillai
சேர்த்து வைப்பதில்லை
sErththu vaippathumillai
கர்த்தர் காக்கின்றார் -2 -கர்த்தரை
karththar kaakkintaar
கவலைப்படுவதனால்
kavalaip paduvathanaal
எவன் தன் வளர்த்தியிலே (2)
yevan than vaLarththiyilaE
ஒரு முழம் கூட்ட முடியும்
oru muzham kootta mudiyum
எதை உடுப்போம் என்று கவலையே வேண்டாம்
ethai uduppOm entru kavalaiyaE vENdaam
சொல்வதைக் கேளுங்கள் -2
sollvathaik kELungaL
வயல்வெளி மலர்களைப் பாருங்கள்
vayal veLi malarhaLai paarungaL
அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
avai uzhappathumillai noorpathumillai
கவலைப்படுவதுமில்லை
kavalaip paduvathumillai
கர்த்தர் உடுத்துகின்றார் -2-கர்த்தரை
karththar uduththuhintaar