Karththarai nambiyaE jeevippOm | கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
karththarai nambyaE jeevippOm
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
kavalai kashtangaL theernthidum
  கைவிடா காத்திடும் பரமனின்
  kaivida kaaththidu paramanin
  கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் -2
  karangaLai naam patri koLvOm

ஜீவ தேவன் பின் செல்லுவோம்
jeeva dEvan pin selluvOm
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம் -2
jeeva oLithanai kaNdadaivOm
  மனதின் காரிருள் நீங்கிடவே
  manathin kaariruL neengidavaE
  மா சமாதானம் தங்கும்  -2— கர்த்தரை
  maa samaathaanam thangum

உண்மை வழி நடந்திடும்
uNmai vazhi nadanthidum
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை -2
uththamanukkentrum karththar thuNai
  கண்கள் அவன்மீது வைத்திடுவார்
  kaNhaL avan meethu vaiththiduvaar
  கருத்தாய்க் காத்திடுவார் -2 -கர்த்தரை
  karuththaai kaaththiduvaar

உள்ளமதின் பாரங்களை 
uLLamathin paarangaLai
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்  -2
ookkamaai karththaridam solluvOm
  இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்   
  ikkattu nEraththil kooppiduvOm
  இயேசு வந்தாதரிப்பார் -2 -கர்த்தரை
  yEsu vanthaatharippaar

அன்பு மிகும் அண்ணலிவர் 
anbu migum aNNalivar
அருமை இயேசுவை நெருங்குவோம் -2
arumai yEsuvai nerunguvOm
  தம்மண்டை வந்தோரை தள்ளிடாரே 
  thammaNdai vanthOrai thaLLidaaraE
  தாங்கி அணைத்திடுவார் -2 -கர்த்தரை
  thaangi aNaiththiduvaar

நீதிமானின் சிரசின் மேல் 
neethimaanin sirasin mEl
நித்திய ஆசீர் வந்திறங்குமே -2
niththiya aaseer vanthirangumaE
  கிருபை நன்மைகள் தொடருமே 
  kirubai nanmaihaL thodarumaE
  கேட்பது கிடைக்குமே -2 -கர்த்தரை
  kEtpathu kidaikkumaE

இம்மைக்கேற்ற இன்பங்களை 
immaikkEtra inbangaLai
நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம் -2
nammai vittaE mutrum ahatruvOm
  மாறாத சந்தோஷம் தேடிடுவோம் 
  maaraatha santhOsham thEdiduvOm
  மறுமை ராஜ்ஜியத்தில் -2 -கர்த்தரை
  marumai raajjiyaththil


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)