நன்றி பலிபீடம் கட்டுவோம்
nantri palipeedam kattuvOm
நல்ல தெய்வம் நன்மை செய்தார் -2
nalla deivam nanmai seiythaar
செய்த நன்மை ஆயிரங்கள்
seiytha nanmai aayirangaL
சொல்லிச் சொல்லி பாடுவேன் -2
solli solli paaduvaEn
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே -2
nantri thahappanaE nanmai seiytheeraE
ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
jeevan thanthu neer anbu koorntheer
பாவம் நீங்கிட கழுவி விட்டீர் -2
paavam neengida kazhuvi vitteer
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
umakkentru vaazha piriththeduththu
உமது ஊழியம் செய்ய வைத்தீர் -2-நன்றி தகப்பனே
umathu oozhiyam seiyya vaiththeer
சிறந்த முறையிலே குரல் எழுப்பும்
sirantha muraiyilaE kural yezhuppum
சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே -2
siluvai raththam neer sinthineeraE
இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
raththa kOttaikkuL vaiththu koNdu
எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர் -2 -நன்றி தகப்பனே
yethiri nuzhaiyaamal kaaththuk koNdeer
இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
iruLin athikaaram ahatri vitteer
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் -2
yEsu arasukkuL sErththu vitteer
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
umakku sonthamaai vaangi koNdu
உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் -2 -நன்றி தகப்பனே
urimai soththaaha vaiththuk koNdeer
புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
puthiya udanpaattin adaiyaaLamaai
புனித இரத்தம் ஊற்றினீரே -2
punitha raththam ootrineeraE
சத்திய ஜீவ வார்த்தையாலே
saththiya jeeva vaarththaiyaalaE
மரித்த வாழ்வையே மாற்றினீரே -2 -நன்றி தகப்பனே
mariththa vaazhvaiyaE maatrineeraE
எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை
yethiraai vaazhnthu vantha ivvulahai
ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால் -2
oppuravaakkineer um raththaththaal
தூரம் வாழ்ந்து வந்த எங்களையே
thooram vaazhnthu vantha engaLaiyaE
அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால் -2 -நன்றி தகப்பனே
aruhil koNdu vantheer aaviyinaal
குற்றம் செய்ததால் மரித்திருந்தோம்
kutram seiythathaal mariththirunthOm
இயேசுவோடே கூட எழச்செய்தீர் -2
yEsuvOdaE kooda yezha seiytheer
கிருபையினாலே இரட்சித்தீரே
kirubaiyinaalaE ratchiththeeraE
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் -2 -நன்றி தகப்பனே
unnathangaLilaE utkaara seiytheer
பார்க்கும் கண்களை தந்தீரையா
paarkkum kaNhaLai thantheeraiyaa
பாடும் உதடுகள் தந்தீரையா -2
paadum uthaduhaL thantheeraiyaa
உழைக்கும் கரங்களை தந்தீரையா
uzhaikkum karangaLai thantheeraiyaa
ஓடும் கால்களைத் தந்தீரையா -2 -நன்றி தகப்பனே
Odum kaalhaLai thantheeraiyaa
நல்ல குடும்பம் நீர் தந்தீரையா
nalla kudumbam neer thantheeraiyaa
செல்ல பிள்ளைகள் தந்தீரையா -2
chella piLLaihaL thantheeraiyaa
அணைக்கும் கணவனை தந்தீரையா
aNaikkum kaNavanai thantheeraiyaa
அன்பு மனைவியை தந்தீரையா -2 -நன்றி தகப்பனே
anbu manaiviyai thantheeraiyaa
இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
irukka nalla oru veedu thantheer
வாழத் தேவையான வசதி தந்தீர் -2
vaazha thEvaiyaana vasathi thantheer
கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
kadumaiyaaha thinam uzhaikka vaiththeer
கடனே இல்லாமல் வாழ வைத்தீர் -2 -நன்றி தகப்பனே
kadanaE illaamal vaazha vaiththeer