பொன்னான இயேசுவை
ponnaana yEsuvai
புண்ணிய நல் நேசரை
puNNiya nal nEsarai (2)
கொண்டு செல்வோம் பூலோகமெங்கும்
koNdu selvOm poolOhamengum
அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம்
avar ontraE vazhi entraE kooruvOm
தேவனே வந்து நம்மை நடத்திடுவார்
dEvanaE vanthu nammai nadaththiduvaar
தேவையறிந்து பயன்படுத்திடுவார் -2
thEvaiyarinthu bayanpaduththiduvaar
அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்
avar ennaLum nammOdu iruppathinaal
அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை -2
alaihaL puyalhaL nammai asaippathillai
அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம் -2
anjaamal selvOm vanjahanai velvOm
அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் -நாம் -பொன்னான
araNaana kOttaihaLai pidiththiduvOm -naam
அவர் எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்
avar eliyah elisaa moolam arputham seiythaar
எங்கள் மூலம் இந்த நாளில் நிச்சயம் செய்வார் -2
engaL moolam intha naaLil nichchayam seiyvaar
எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும் -2
yeththanaiyO nOihaL aththanaiyum pOkkum
இயேசுவின் ரத்தத்தாலே ஜெயம் பெறுவோம்- நாம் -பொன்னான
yEsuvin raththaththaalaE jeyam peruvOm -naam
காலமும் கடல் அலையும் காத்திருக்காது உள்ள
kaalamum kadal alaiyum kaaththirukkaathu uLLa
காலத்திலே தேசத்தை கலக்கிடுவோம் -2
kaalaththilaE dEsaththai kalakkiduvOm
கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும் -2
kallaana nenjam karainthida seiyyum
கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் -நாம் -பொன்னான
kanivaana karththar paNi seiythiduvOm -naam