நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
nantri sollaamal irukkavaE mudiyaathu
பல நன்மை செய்த இயேசுவுக்கு
pala namai seiytha yEsuvukku (2)
நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன்
nantri nantri nantri entru solli naan thuthippaEn
நாள்தோறும் போற்றுவேன்
naaL thOrum pOtruvaEn
எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
yeththanaiyO nanmaihaLai en vaazhvil seiythaaraE
ஏராளமாய் நன்றி சொல்வேன் -2
yEraaLamaai nantri solvaEn
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
aththanaiyum ninaiththu ninaiththu naan thuthippaEn
ஆண்டவரை போற்றுவேன் -2
aaNdavarai pOtruvaEn
மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த போதெல்லாம்
maraNa paLLaththaakkil naan nadantha pOthellaam
பாதுகாத்தீர் ஐயா -2
paathukaaththeer iyyaa
மீண்டும் ஜீவனை கொடுத்து நீர் என்னை
meeNdum jeevanai koduththu neer ennai
வாழ வைத்தீரையா -2
vaazha vaiththeeraiyaa
தேவன் அருளிய சொல்லி முடியாத
dEvan aruLiya solli mudiyaatha
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம் -2
yeevuhaLukkaai sthOththiram
அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்
aLavillaa avarin kirubaihaLukkaai
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2
aayuL muzhuthum sthOththiram