Showing posts with label D.G.S Dhinakaran. Show all posts
Showing posts with label D.G.S Dhinakaran. Show all posts

AruL naathar naamamathil | அருள் நாதர் நாமமதில்

அருள் நாதர் நாமமதில் 
aruL naathar naamamathil
ஒருமனமாய் உருகி 
orumanamaai uruhi
  தொழுகின்ற நேரமெல்லாம் 
  thozhuhintra nEramellaam
  எழும்பிடுவார் நடுவில் -நாம் 
  ezhumbiduvaar naduvil -naam

இதயம் நொறுங்கினோரின் 
idhayam norunginOrin
ஆதரவும் அவரே -2
aatharavum avaraE
  கதறல்கள் கேட்டிடுவார் 
  katharalhaL kEttiduvaar
  பதறாமல் அணைத்திடுவார் -2 -அருள் நாதர் 
  patharaamal aNaiththiduvaar

Akkini abishEgam yeenthidum | அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
akkini abishEgam yeenthidum
தேவ ஆவியால் நிறைத்திடும் -2
dEva aaviyaal niraiththidum
  தேவா தேவா இக்கணமே ஈந்திடும் -அக்கினி
  dEvaa dEvaa ikkaNamaE yeenthidum

பரமன் இயேசுவை நிறைத்தீரே
paraman yEsuvai niraiththeeraE
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் -2 -தேவா தேவா 
parisuththa aaviyaal niraiththidum

உந்தன் சீஷருக்களித்தீரே
unthan seesharukkaLiththeeraE
அன்பின் அபிஷேகம் ஈந்திடும் -2 -தேவா தேவா 
anbin abishEgam yeenthidum

சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
simsOn kithiyOnai niraiththeeraE
கர்த்தரின் ஆவியால் நிறைத்திடும் -2 -தேவா தேவா 
karththarin aaviyaal niraiththidum

தீர்க்கன் எலிசாவுக்களித்தீரே
theerkan yelisaavukkaLiththeeraE
இரட்டிப்பின் வல்லமையால் நிறைத்திடும் -2 -தேவா தேவா 
rattippin vallamaiyaal niraiththidum

மீட்பர் இயேசுவின் வருகையிலே
meetpar yEsuvin varuhaiyilaE
நானும் அவரைப் போல் இருக்கவே -2 -தேவா தேவா 
naanum avarai pOl irukkavaE

மீட்பின் நாளுக்கு முத்திரையாய்
meetpin naaLukku muththiraiyaai
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் -2 -தேவா தேவா 
parisuththa aaviyaal niaraiththidum


PaaduvaEn paravasamaahuvaEn | பாடுவேன் பரவசமாகுவேன்

பாடுவேன் பரவசமாகுவேன்
paaduvaEn paravasamaahuvaEn
பறந்தோடும் இன்னலே -2
paranthOdum innalaE

அலையலையாய் துன்பம் சூழ்ந்து
alaiyalaiyaai thunbam soozhnthu
நிலை கலங்கி ஆழ்த்தையில் -2
nilai kalangi aazhthaiyil
  அலை கடல் தடுத்து நடுவழி விடுத்து -2
  alai kadal thaduththu nadu vazhi viduththu
கடத்தியே சென்ற கர்த்தனை -பாடுவேன் 
kadaththiyaE sentra karththanai

என்று மாறும் எந்தன் துயரம்
entru maarum enthan thuyaram
என்றே மனமும் ஏங்கையில் -2
entraE manamum yEngaiyil
  மாராவின் கசப்பை மதுரமுமாக்கி -2
  maaraavin kasappai mathuramumaakki
மகிழ்வித்த மகிபனையே -பாடுவேன் 
mahizhviththa mahibanaiyaE

ஒன்றுமில்லா வெறுமை நிலையில்
ontrumillaa verumai nilaiyil
உதவுவாரற்றுப் போகையில் -2
uthavu vaaratru pOhaiyil
  கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்து -2
  kanmalai piLanthu thaNNeerai suranthu
தாகம் தீர்த்த தயவை -பாடுவேன் 
thaaham theerththa thayavai

வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
vanaanthiramaai vaazhkai maari
பட்டினி சஞ்சலம் நேர்கையில் -2
pattini sanjalam nErhaiyil
  வான மன்னாவால் ஞானமாய் போஷித்த -2
  vaana mannaavaal gnanamaai pOshiththa
காணாத மன்னா இயேசுவே -பாடுவேன் 
kaaNaatha mannaa yEsuvai


SOrnthu pOhaathaE manamaE | சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே
sOrnthu pOhaathaE manamaE
சோர்ந்து போகாதே (போராட) -2
sOrnthu pOhaathaE 

கண்டுன்னை அழைத்த தேவன் 
kaNdunnai azhaiththa dEvan 
கைவிடுவாரோ -2 -சோர்ந்து
kaividuvaarO

வாக்களித்த தேவனை நீ
vaakkaLiththa dEvanai nee
பாடிக் கொண்டாடு -2
paadik koNdaadu
  ஊக்கமான ஆவி உன்னை
  ookkamaana aavi unnai
  தாங்க மன்றாடு -2-சோர்ந்து
  thaanga mantraadu

துன்பங்கள் தொல்லைகள் உன்னை
thunbangaL thollaihaL unnai
சூழ்ந்து கொண்டாலும் -2
soozhnthu koNdaalum
  அன்பர் உன்னை தேற்றும் நேரம்
  anbar unnai thEtrum nEram
  ஆனந்தமல்லோ -2-சோர்ந்து
  aananthamallO

சோதனைகளை சகிப்போன்
sOthanaihaLai sahippOn
பாக்கியவானல்லோ -2
paakkiyavaan allO
  ஜீவ கிரீடம் சூடும் நேரம் 
  jeeva kreedam soodum nEram
  என்ன பேரின்பம் -2 -சோர்ந்து
  enna pErinbam



SOraathaE en manamaE | சோராதே என் மனமே

சோராதே என் மனமே
sOraathaE en manamaE
சோர்ந்து போகாதே என் உள்ளமே -2
sOrnthu pOhaathaE en uLLamaE
  மாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்
  maaraatha karththar un pakkam irukkiraar
பாராதவர் போல தான் – உன்னை -சோராதே
paaraathavar pOla thaan -unnai

பொன்னை புடமிடுவார்
ponnai pudamiduvaar
அதின் மண்ணை அகற்றிடுவார் -
athin maNNai ahatriduvaar
  உன்னை நேசிப்பதால் இந்த பணி செய்வார்
  unnai nEsippathaal intha paNi seiyvaar
  உனக்கேற்ற கிரீடம் செய்வார் – இயேசு -சோராதே 
  unakkEtra kreedam seiyvaar -yEsu

வடியாதே கண்ணீர் இன்று
vadiyaathaE kaNNeer intru
மனம் மடிவடையாதே நின்று -2
manam madivadaiyaathaE nintru
  இடி மேகம் அகன்றிடும் விடிவெள்ளி ஜொலித்திடும்
  idi mEham ahantridum vidiveLLi joliththidum
  நடுப்பகல் கதிர் வீசிடும் – உனக்கு -சோராதே 
  naduppahal kathir veesidum -unakku

Thollai kashtangaL soozhnthidum | தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் 
thollai kastangaL soozhnthidum
துன்பம் துக்கம் வரும்
thunbam thukkam varum
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் 
inbaththil thunbam nErnthidum
இருளாய்த் தோன்றும் எங்கும்
iruLaai thOntrum yengum
சோதனை வரும் வேளையில் 
sOthanai varum vELaiyil
சொற்கேட்கும் செவியிலே
sor kEtkum seviyilaE
பரத்திலிருந்து ஜெயம் வரும்
paraththilirunthu jeyam varum
பரன் உன்னைக் காக்க வல்லோர்
paran unnai kaakka vallOr

காக்கும் வல்ல மீட்பர் 
kaakkum valla meetpar
உண்டெனக்கு -3    (2)
uNdenakku 
  காத்திடுவார் என்றுமே -2
  kaaththiduvaar entrumE

ஐயம் மிருந்ததோர் காலத்தில் 
iyyam irunthathOr kaalaththil
ஆவி குறைவால் தான்
aavi kuraivaal thaan
மீட்பர் உதிர பெலத்தால் 
meetpar uthira belaththaal
சத்துருவை வென்றேன்
saththuruvai ventraEn
என் பயம் யாவும் நீங்கிற்றே 
en bayam yaavum neengitraE
இயேசு கை தூக்கினார்
yEsu kai thookkinaar
முற்றும் என்னுள்ளம் மாறிற்று 
mutrum en uLLam maaritru
இயேசென்னைக் காக்க வல்லோர் -காக்கும் 
yEsennai kaakka vallOr

என்ன வந்தாலும் நம்புவேன் 
enna vanthaalum nambuvaEn
என் நேச மீட்பரை
en nEsa meetparai
யார் கைவிட்டாலும் பின் செல்வேன்
yaar kaivittaalum pin selvaEn 
எனது இயேசுவை
enathu yEsuvai
அகல ஆழ உயரமாய் 
ahala aazha uyaramaai
எவ்வளவன்பு கூர்ந்தார்
evvaLavanbu koornthaar
என்ன துன்பங்கள் வந்தாலும் 
enna thunbangaL vanthaalum
அவர் என்னைக் கைவிட மாட்டார் -காக்கும் 
avar ennaik kaivida maattaar

YEsu azhaikkiraar | இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் -2
yEsu azhaikkiraar -2
ஆவலாய் உன்னைத்  தம் கரங்கள் நீட்டியே 
aavalaai unnai tham karangaL neettiyaE
இயேசு அழைக்கிறார்
yEsu azhaikkiraar

எத்துன்ப நேரத்திலும் 
yeththunba nEraththilum
ஆறுதல் உனக்களிப்பார் -2
aaruthal unakkaLippaar
  என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் 
  entuNarnthu neeyum yEsuvai nOkkinaal
  எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் -2
  yellaiyillaa inbam petriduvaai

கண்ணீரெல்லாம் துடைப்பார் 
kaNNeerellaam thudaippaar
கண்மணி போல் காப்பார் -2
kaNmaNi pOl kaappaar
  கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும் 
  kaarmEham pOntra kashtangaL vanthaalum
  கனிவோடே உன்னைக்  காத்திடவே -2
  kanivOdaE unnai kaaththidavaE

சோர்வடையும் நேரத்தில் 
sOrvadaiyum nEraththil
ஆறுதல் உனக்களிப்பார் -2
aaruthal unakkaLippaar
  அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால் 
  avar un veLichcham ratchippumaanathaal
  தாமதமின்றி நீ வந்திடுவாய் -2
  thaamathamintri nee vanthiduvaai

சகல வியாதியையும் 
sahala viyaathiyaiyum
குணமாக்கும் வல்லவராம் -2
guNamaakkum vallavaraam
  யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே 
  yaaraayirunthaalum pEthangaL intriyaE
  கிருபையை அன்பை அளித்திடவே -2
  kirubaiyaai anbai aLiththidavaE




Unthan Aasi Thaarum | உந்தன் ஆசி தாரும்

உந்தன் ஆசி தாரும்
Unthan aasi thaarum
எந்தன் இயேசு தேவா  
enthan YEsu dEvaa  
தந்தையே நான் பணிகிறேன் (2)
thanthaiyaE naan paNihiraEn (2)

பெலன் இல்லாதவள் நானே
Belan illaathavaL naanaE
பெலனைத் தாரும் தேவா (2)
belanaith thaarum dEvaa (2)
உந்தன் பெலன் போல் பெலன் ஏது
unthan belan pOl belan yaEthu
என் பெலனும் சுகமும் நீரே (2)
en belanum suhamum neeraE (2) - (உந்தன்)(unthan)

ஞானமற்றவள் நானே
GnanamattravaL naanaE
ஞானம் தாரும் தேவா  (2)
gnanam thaarum dEvaa  (2)
உம்மையன்றி வழி ஏது
ummaiyantri vaLi yaEthu
என் கல்வி ஊற்றும் நீரே (2)
en kalvi ootrum neeraE (2) - (உந்தன்)(unthan)






    

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)